/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை கைப்பற்றியது ஆப்கன்: தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
/
தொடரை கைப்பற்றியது ஆப்கன்: தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
தொடரை கைப்பற்றியது ஆப்கன்: தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
தொடரை கைப்பற்றியது ஆப்கன்: தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
ADDED : செப் 21, 2024 10:31 PM

சார்ஜா: குர்பாஸ், ரஷித் கான் கைகொடுக்க ஆப்கானிஸ்தான் அணி 177 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
சார்ஜா சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. சார்ஜாவில், இரண்டாவது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (105), ரஹ்மத் ஷா (50), அஸ்மதுல்லா உமர்சாய் (86*) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி ரஷித் கான் 'சுழலில்' சரிந்தது. கேப்டன் பாவுமா (38), டோனி டி ஜோர்ஜி (31) ஆறுதல் தர தென் ஆப்ரிக்க அணி 34.2 ஓவரில் 134 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5, நங்கெயாலியா கரோட் 4 விக்கெட் சாய்த்தனர்.
முதன்முறை
ஐ.சி.சி., தரவரிசையில் 'டாப்-5' வரிசையில் இடம் பெற்றுள்ள அணிக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான். தென் ஆப்ரிக்க அணி 3வது இடத்தில் உள்ளது.
இமாலய வெற்றி
ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன் வித்தியாசத்தில் தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 2018ல் சார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.