/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை: ரஹ்மத் ஷா சதம்
/
ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை: ரஹ்மத் ஷா சதம்
ADDED : ஜன 04, 2025 10:11 PM

புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா சதம் விளாசினார்.
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157, ஜிம்பாப்வே 243 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 46/3 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹ்மத் ஷா (139) சதம் கடந்து கைகொடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 291/7 ரன் எடுத்து, 205 ரன் முன்னிலை பெற்றிருந்த போது மழையால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இஸ்மத் (64), ரஷித் கான் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 4 விக்கெட் வீழ்த்தினார்.

