sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி: எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது

/

ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி: எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது

ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி: எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது

ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி: எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது


ADDED : பிப் 16, 2026 11:05 PM

Google News

ADDED : பிப் 16, 2026 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்சை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது.

டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தது.

எமிரேட்ஸ் அணிக்கு அலிஷான் ஷராபு, சோயிப் கான் ஜோடி கைகொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது அலிஷான் (40) அவுட்டானார். அஸ்மதுல்லா உமர்சாய் 'வேகத்தில்' சையது ஹைதர் (13), ஹர்ஷித் கவுசிக் (0) வெளியேறினர். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சோயிப் கான், 37 பந்தில் அரைசதம் கடந்தார். உமர்சாய் பந்தில் சோயிப் கான் (68 ரன், 4x6, 6x4) அவுட்டானார்.

எமிரேட்ஸ் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் உமர்சாய் 4, முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

உமர்சாய் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரன் (53) நம்பிக்கை தந்தார். டார்விஷ் ரசூலி (33) ஓரளவு கைகொடுத்தார். முகமது ஜவாதுல்லா வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த அஸ்மதுல்லா உமர்சாய், ஜுனைடு சித்திக் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உமர்சாய் (40 ரன், 3x6, 2x4), நபி (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை உமர்சாய் வென்றார்.

இம்முறை முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான், 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

ரஷித் கான் '700'

ஒரு விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 700 விக்கெட் சாய்த்த முதல் பவுலர் என்ற புதிய வரலாறு படைத்தார். இதுவரை 518 போட்டியில், 700 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631 விக்கெட், 582 போட்டி) உள்ளார்.






      Dinamalar
      Follow us