/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மூன்று விக்கெட் சாய்த்தார் ஆகாஷ் * ஜோ ரூட் சதம்
/
மூன்று விக்கெட் சாய்த்தார் ஆகாஷ் * ஜோ ரூட் சதம்
ADDED : பிப் 23, 2024 06:51 PM

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 302/7 ரன் எடுத்தது. வேகத்தில் மிரட்டிய ஆகாஷ் தீப் 3 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில், இந்திய அணி 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் 313வது டெஸ்ட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகம் ஆனார்.
ஆகாஷ் நம்பிக்கை
இங்கிலாந்து அணிக்கு கிராலே, டக்கெட் ஜோடி துவக்கம் தந்தது. மறுபக்கம் வேகத்தில் மிரட்டிய ஆகாஷ், டக்கெட் (11), போப்பை (0) ஒரே ஓவரில் அவுட்டாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர் கிராலேவையும் (42), வீழ்த்தினார். சுழலில் தன் பங்கிற்கு அசத்திய அஷ்வின், பேர்ஸ்டோவை (38) திருப்பி அனுப்பினார்.
ரூட் சதம்
போக்ஸ் 47 ரன் எடுத்த போது சிராஜ் 'வேகத்தில்' அவுட்டானார். கேப்டன் ஸ்டோக்ஸ் (3), ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஹார்ட்லேவை (13) சிராஜ் வெளியேற்றினார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன் எடுத்திருந்தது. இந்தியாவின் ஆகாஷ் 3, சிராஜ் 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.