/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆண்டர்சன் '700' * டெஸ்ட் அரங்கில் சாதனை
/
ஆண்டர்சன் '700' * டெஸ்ட் அரங்கில் சாதனை
ADDED : மார் 09, 2024 11:34 PM

தர்மசாலா: இந்தியா வந்த இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலை பின்னணி கொண்ட தர்மசாலா மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 473 ரன் எடுத்து, 255 ரன் முன்னிலை பெற்றிருந்தது. குல்தீப் (27), பும்ரா (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆண்டர்சன் அபாரம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. குல்தீப்பை (30) அவுட்டாக்கிய ஆண்டர்சன், டெஸ்ட் அரங்கில் 700வது விக்கெட்டை பெற்றார். இம்மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார் ஆண்டர்சன். இலங்கையின் முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் வார்னுக்கு (708) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது பவுலர் ஆனார்.
அதிக விக்கெட் சாய்த்த 'டாப்-5' பவுலர்கள்
பவுலர்/அணி போட்டி விக்.,
முரளிதரன்/இலங்கை 133 800
வார்ன்/ஆஸி., 145 708
ஆண்டர்சன்/இங்கி., 187 700
கும்ளே/இந்தியா 132 619
பிராட்/இங்கி., 167 604
* 100 டெஸ்டில் 516 விக்கெட் சாய்த்த அஷ்வின், 9வது இடத்தில் உள்ளார்.
1 முதல் 700 வரை
விக்., வீரர்/அணி
1 வெர்முலன்/ஜிம்பாப்வே
100 காலிஸ்/தெ.ஆப்.,
200 சிடில்/ஆஸி.,
300 புல்டன்/நியூசி.,
400 கப்டில்/நியூசி.,
500 பிராத்வைட்/வெ.இண்டீஸ்
600 அசார் அலி/பாக்.,
700 குல்தீப்/இந்தியா

