/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அனுபவ அஷ்வினுக்கு அதிர்ச்சி: சர்வதேச லீக் வீரர்கள் ஏலத்தில்
/
அனுபவ அஷ்வினுக்கு அதிர்ச்சி: சர்வதேச லீக் வீரர்கள் ஏலத்தில்
அனுபவ அஷ்வினுக்கு அதிர்ச்சி: சர்வதேச லீக் வீரர்கள் ஏலத்தில்
அனுபவ அஷ்வினுக்கு அதிர்ச்சி: சர்வதேச லீக் வீரர்கள் ஏலத்தில்
ADDED : அக் 02, 2025 11:16 PM

துபாய்: சர்வதேச லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் அஷ்வின் விலை போகவில்லை.
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 39. கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஷ்வின், சமீபத்தில் பிரிமியர் லீக் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 -- 2026, ஜன. 26) சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். ஏற்கனவே இவர், அடுத்த மாதம் ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசனுக்கான (டிச. 2 -- 2026, ஜன. 4) வீரர்கள் ஏலத்தில் அஷ்வின் இடம் பெற்றிருந்தார். இதில், இவருக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ. ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரை எந்த ஒரு அணியும் வாங்க முன்வரவில்லை. இருப்பினும் அஷ்வின், 'வைல்டு கார்டு' முறையில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.