/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அனுஜ்-சுஜால் சாதனை * 'டி-20' கிரிக்கெட்டில்...
/
அனுஜ்-சுஜால் சாதனை * 'டி-20' கிரிக்கெட்டில்...
ADDED : ஆக 30, 2024 11:03 PM

புதுடில்லி: 'டி-20' கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் அனுஜ்-சுஜால் இரண்டாவது இடம் பெற்றனர்.
டில்லியில் பிரிமியர் லீக் 'டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கிழக்கு டில்லி, புரானி டில்லி அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய கிழக்கு டில்லி அணிக்கு அனுஜ் ராவத், சுஜால் சிங் ஜோடி அசத்தல் துவக்கம் தந்தது. இருவரும் சதம் விளாச கிழக்கு டில்லி அணி, 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 241 ரன் குவித்தது. அனுஜ் ராவத் (121), சுஜால் சிங் (108) அவுட்டாகாமல் இருந்தனர்.
'டி-20' கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக சீன அணிக்கு எதிராக கடந்த பிப்., மாதம் நடந்த போட்டியில் ஜப்பானின் லச்லன், கெண்டல் ஜோடி 258 ரன் எடுத்தது, முதலிடத்தில் உள்ளது.
பின் களமிறங்கிய புரானி டில்லி, 20 ஓவரில் 215/8 ரன் எடுத்து, 26 ரன்னில் தோற்றது.