ADDED : மே 21, 2026 10:43 PM

புதுடில்லி: முத்தரப்பு தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் அனுகுல் ராய் சேர்க்கப்பட்டார்.
இலங்கையின் தம்புலாவில், முத்தரப்பு ஒருநாள் தொடர் (ஜூன் 9-21) நடக்கவுள்ளது. இதில் இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஹர்ஷ் துபே 23, இடம் பெற்றிருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு முதன்முறையாக தேர்வான ஹர்ஷ் துபே, முத்தரப்பு தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து, இவருக்கு பதிலாக, மற்றொரு சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' அனுகுல் ராய் 27, சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனுகுல் ராய், கிரிக்கெட் லீக் அரங்கில் கொல்கட்டா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2018ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் அதிகபட்சமாக 14 விக்கெட் சாய்த்தார்.
