sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

'வேகத்தில்' அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்

/

'வேகத்தில்' அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்

'வேகத்தில்' அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்

'வேகத்தில்' அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்


ADDED : செப் 16, 2024 10:02 PM

Google News

ADDED : செப் 16, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலுார்: உள்ளூர் போட்டியில் 'வேகத்தில்' அசத்திய அர்ஜுன் 9 விக்கெட் சாய்த்தார்.

கர்நாடகாவின் ஆலுாரில், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) சார்பில் உள்ளூர் போட்டி நடந்தது. இதில் கர்நாடகா, கோவா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கர்நாடகா அணி 103 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கோவா அணி சார்பில் இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன், 13 ஓவரில், 41 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின் அபினவ் தேஜ்ராணா (109) கைகொடுக்க கோவா அணி முதல் இன்னிங்சில் 413 ரன் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் கர்நாடகா அணி 121 ரன்னுக்கு சுருண்டது. 'வேகத்தில்' மிரட்டிய அர்ஜுன், 13.3 ஓவரில், 46 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். கோவா அணி இன்னிங்ஸ், 189 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு உதவிய அர்ஜுன், இதுவரை 13 முதல் தரம் (21 விக்கெட்), 15 'லிஸ்ட் ஏ' (21), 21 'டி-20' (26) போட்டிகளில் பங்கேற்று 68 விக்கெட் சாய்த்துள்ளார்.






      Dinamalar
      Follow us