தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஐ.சி.சி., தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்

ஐ.சி.சி., தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்

ஐ.சி.சி., தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 07:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 19வது இடத்துக்கு முன்னேறினார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில், 12 இடம் முன்னேறிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 19வது இடத்தை (தலா 567 புள்ளி) சகவீரர் அக்சர் படேலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக ‘வேகத்தில்’ மிரட்டிய அர்ஷ்தீப் சிங், 4 இன்னிங்சில், 8 விக்கெட் சாய்த்தார்.

மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (580 புள்ளி), 7வது இடத்தில் இருந்து 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (760) நீடிக்கிறார்.

பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா (732 புள்ளி) 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான சுப்மன் கில் (806), விராத் கோலி (757) முறையே ‘நம்பர்–1’, 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மற்றொரு இந்திய வீரர் கே.எல். ராகுல் (644) 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (232) 9வது இடத்தில் நீடிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us