தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அர்ஷ்தீப் சிங் நினைத்தது பலித்தது... தட்டித்துாக்கிய ஷாய் ஹோப் விக்கெட்

அர்ஷ்தீப் சிங் நினைத்தது பலித்தது... தட்டித்துாக்கிய ஷாய் ஹோப் விக்கெட்

அர்ஷ்தீப் சிங் நினைத்தது பலித்தது... தட்டித்துாக்கிய ஷாய் ஹோப் விக்கெட்


UPDATED : அக் 13, 2026 02:32 AM

ADDED : அக் 13, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:32 AM ADDED : அக் 13, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்துார்: ‘‘திட்டமிட்டபடி ஷாய் ஹோப் விக்கெட்டை கச்சிதமாக வீழ்த்தியது மகிழ்ச்சி அளித்தது,’’என அர்ஷ்தீப் சிங் தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்தியா 2–1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது சவால் நாளை (அக். 14), ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

ஆட்டநாயகன்



இந்துாரில் நேற்று முன் தினம் நடந்த மூன்றாவது போட்டியில் ஆட்டநாயகனாக அர்ஷ்தீப் சிங் (3/44) ஜொலித்தார். இந்தியா நிர்ணயித்த 224 ரன்னை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே ‘செக்’ வைத்தார்.

இரண்டாவது போட்டி யில் சதம் விளாசிய கேப்டன் ஷாய் ஹோப் விக்கெட்டை குறி வைத்தார். அர்ஷ்தீப் மணிக்கு 136 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் ஹோப், இம்முறை 5 ரன்னில் போல்டாக, இந்திய அணியின் வெற்றி பிரகாசமானது.

இது பற்றி அர்ஷ்தீப் சிங் கூறுகையில், ‘‘மூன்றாவது போட்டிக்கு முன் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் விக்கெட்டை விரைவில் கைப்பற்ற திட்டம் வகுத்தோம். துல்லியமாக பந்துவீசி நெருக்கடி தருவதே இலக்கு. மயங்க் யாதவும் பிடியை இறுக்கினார்.

இதனால் தடுமாறிய ஹோப், 2வது ஓவரிலேயே அவுட்டானார். திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதால், மகிழ்ச்சி அடைந்தோம். இதற்கு பவுலிங் பயிற்சியாளர்கள், சீனியர் வீரர்கள் உள்ளிட்டோர் காரணம்.

பேட்டிங் ஆர்வம்



இந்திய அணியின் ‘டிரஸ்சிங் ரூமில்’, வீரர்கள் ‘ரிலாக்சாக’ காணப்படுகின்றனர். சீனியர், ஜூனியர் என உணர்வதில்லை. எந்த பவுலரிடமும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். கடைசி கட்டத்தில் பேட்டிங்கிலும் கைகொடுக்க விரும்புகிறேன். இந்துாரில் ஒரு சிக்சர் உட்பட 11 ரன் எடுத்தேன். இருப்பினும் என்னால் தான் அக்சர் படேல் ரன் அவுட்டானார். இதற்காக அவரிடம் ‘சாரி’ கேட்கிறேன்,’’என்றார்.

சவாலுக்கு தயார்



இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில், ‘‘இந்துார் போட்டியில் நமது பவுலர்கள் திட்டமிட்டபடி, நம்பிக்கையுடன் செயல்பட்டனர். அவர்களது கையில் நான் பந்தை கொடுத்த போது, சவாலுக்கு தயாராக இருந்தனர். பேட்டிங்கில் அபிஷேக் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தார். ஒட்டுமொத்த மாக சிறந்த போட்டியாக அமைந்தது,’’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us