/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
297 ரன் விளாசிய ஆர்யவீர்: கூச் பெஹார் டிராபியில்
/
297 ரன் விளாசிய ஆர்யவீர்: கூச் பெஹார் டிராபியில்
ADDED : நவ 22, 2024 10:13 PM

ஷில்லாங்: கூச் பெஹார் டிராபியில் முன்னாள் இந்திய வீரர் சேவக்கின் மகன் ஆர்யவீர் 297 ரன் விளாசினார்.
மேகாலயாவின் ஷில்லாங் நகரில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி லீக் போட்டி நடக்கிறது. இதில் டில்லி, மேகாலயா அணிகள் விளையாடுகின்றன. டில்லி அணி சார்பில் முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக்கின் மகன் ஆர்யவீர் 17, விளையாடுகிறார். மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 260 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 468/2 ரன் எடுத்திருந்தது. ஆர்யவீர் சேவக் (200) அவுட்டாகாமல் இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஆர்யவீர், 309 பந்தில், 3 சிக்சர், 51 பவுண்டரி உட்பட 297 ரன்னில் ஆட்டமிழந்தார். மூன்று ரன்னில் 'டிரிபிள் செஞ்சுரி' வாய்ப்பை இழந்த ஆர்யவீர், டெஸ்டில் தனது தந்தை சேவக்கின் சிறந்த ஸ்கோரான 319 ரன்னை (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2008, இடம்: சென்னை), முந்தும் வாய்ப்பை 23 ரன்னில் கோட்டைவிட்டார்.
மறுமுனையில் தன்யா நக்ரா (130) கைகொடுக்க, டில்லி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 623 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஆட்டநேர முடிவில் மேகாலயா அணி 2வது இன்னிங்சில் 141/5 ரன் எடுத்து, 222 ரன் பின்தங்கி இருந்தது.