/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
/
ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ADDED : டிச 10, 2025 09:29 PM

அடிலெய்டு: ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் தேர்வானார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட், வரும் டிச. 17ல் அடிலெய்டில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
முதலிரண்டு டெஸ்டில் விளையாடாத 'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்ஸ் 32, தேர்வானார். கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய இவர், காயத்தால் ஓய்வில் இருந்தார். பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடாத சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் 38, இப்போட்டிக்கான 'லெவன்' அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகுபகுதி காயத்தால் 'டாப்-ஆர்டர்' பேட்டர் உஸ்மான் கவாஜா 38, விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
ஆஸி., அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாக்கெட், கேமிரான் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், நாதன் லியான், மைக்கேல் நேசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்டு, பியூ வெப்ஸ்டர்.

