/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கேலி செய்த ஆஸ்திரேலிய 'மீடியா' * பரிதாப நிலையில் இங்கிலாந்து
/
கேலி செய்த ஆஸ்திரேலிய 'மீடியா' * பரிதாப நிலையில் இங்கிலாந்து
கேலி செய்த ஆஸ்திரேலிய 'மீடியா' * பரிதாப நிலையில் இங்கிலாந்து
கேலி செய்த ஆஸ்திரேலிய 'மீடியா' * பரிதாப நிலையில் இங்கிலாந்து
ADDED : டிச 22, 2025 11:08 PM

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணி, கடந்த 1882ல் லண்டன் ஓவல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்து மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுகுறித்து 'லண்டன் ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகை கேலியாக வெளியிட்ட செய்தியில், '1882, ஆக., 29ல் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது. இதன் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் ('ஆஷஸ்') ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது,' என, இரங்கல் செய்தி போல குறிப்பிட்டது.
பின், 1883ல் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி தொடரை 2--1 என வென்று பதிலடி கொடுத்தது. இத்தொடரின் மூன்றாவது டெஸ்டில் பயன்படுத்திய 'பெயில்ஸ்களை', சில பெண்கள் எரித்து, அதன் சாம்பலை(ஆஷஸ்) 6 அங்குல நீளமுள்ள மண்ணால் ஆன, கலசத்தில் போட்டு, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் பிளிக்கிடம் வழங்கினர். அன்று முதல் இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' என பெயர் வந்தது.
தற்போது, 74வது தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. கேப்டன் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தின் அதிரடி 'பாஸ்பால்' ஆட்ட அணுகுமுறை, இங்கிலாந்துக்கு கோப்பை வெல்ல உதவும் என நம்பப்பட்டது.
மாறாக, மொத்தம் 11 நாள் மட்டும் நடந்த முதல் 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வென்று, 3-0 என தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை, கடைசி பக்கத்தில் 'இரங்கல்' செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், 'பாசமான 'பாஸ்பால்' கிரிக்கெட்டுக்கு நினைவு அஞ்சலி. 2025, டிச. 21ல் இது, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மரணம் அடைந்து விட்டது. ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கலம் அஞ்சலி செலுத்தினர்,' என கேலியாக தெரிவித்துள்ளது.
இது கடந்த 1882ல் 'லண்டன் ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தி போல உள்ளது.

