தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஸி., வலுவான முன்னிலை * 142 ரன் குவித்தார் டிராவிஸ் ஹெட்

ஆஸி., வலுவான முன்னிலை * 142 ரன் குவித்தார் டிராவிஸ் ஹெட்

ஆஸி., வலுவான முன்னிலை * 142 ரன் குவித்தார் டிராவிஸ் ஹெட்


ADDED : டிச 19, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிலெய்டு: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் 142 ரன் குவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன் எடுத்தது. 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 213/8 ரன் எடுத்து, 158 ரன் பின்தங்கி இருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. 9 வது விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்த போது, கேப்டன் ஸ்டோக்ஸ் 83 ரன்னில், ஸ்டார்க் பந்தில் போல்டானார். ஆர்ச்சர் (51) அரைசதம் அடித்து அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ஆல் அவுட்டானது. கம்மின்ஸ், போலந்து தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

ஹெட் அபாரம்

முதல் இன்னிங்சில் பெற்ற 85 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சை துவக்கியது. டிராவிஸ் ஹெட், வெதரால்டு (1) ஜோடி துவக்கம் தந்தது. லபுசேன் 13, கவாஜா 40 ரன் எடுத்தனர். கேமரான் கிரீன் 7 ரன் மட்டும் எடுத்தார். சொந்தமண்ணில் அசத்திய ஹெட், பவுண்டரி மழை பொழிந்தார். 99 ரன்னில் ஆர்ச்சர் பந்தில், ஹெட் கொடுத்த கேட்ச்சை புரூக் நழுவவிட்டார்.

வாய்ப்பை பயன்படுத்திய ஹெட், இத்தொடரில் இரண்டாவது சதம் அடித்தார். அலெக்ஸ் கேரி தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 271/4 ரன் எடுத்து, 356 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 5வது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த ஹெட் (142), கேரி (52) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us