தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹெட், ஸ்மித் கலக்கல் சதம் * ஆஸி., அணி ரன் மழை

ஹெட், ஸ்மித் கலக்கல் சதம் * ஆஸி., அணி ரன் மழை

ஹெட், ஸ்மித் கலக்கல் சதம் * ஆஸி., அணி ரன் மழை


ADDED : ஜன 06, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிட்னி: சிட்னி டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 518/7 ரன் குவித்து, 134 ரன் முன்னிலை பெற்றது. டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம் விளாசினர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட், சிட்னியில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 166/2 எடுத்து, 218 ரன் பின்தங்கி இருந்தது. ஹெட் (91 ரன், 87 பந்து), நேசர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹெட் அபாரம்

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. டெஸ்ட் அரங்கில் 12வது சதம் அடித்தார் ஹெட் 32. தவிர, ஹைடனுக்குப் பின் (2002-03) ஒரு ஆஷஸ் தொடரில் 3 சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஆனார் ஹெட்.

நேசர் 24 ரன் எடுத்தார். பவுண்டரி மழை (24) பொழிந்த ஹெட், 166 பந்தில் 163 ரன் எடுத்து, பெத்தெல் பந்தில் அவுட்டானார். கடைசி டெஸ்டில் களமிறங்கிய கவாஜா (17) ஏமாற்ற, கேரி (16) நிலைக்கவில்லை.

ஸ்மித் சதம்

மறுபக்கம் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 37 வது, இத்தொடரில் முதல் சதம் அடித்தார். கேமரான் கிரீன் 37 ரன் எடுத்து வெளியேறினார். மூன்றாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 518/7 ரன் குவித்து, 134 ரன் முன்னிலை பெற்றது. ஸ்மித் (129), வெப்ஸ்டர் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

இங்கிலாந்து சார்பில் கார்ஸ் 3, ஸ்டோக்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.

பிராட்மேனுக்கு அடுத்து...

ஆஷஸ் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில் இங்கிலாந்தின் ஜாக் ஹாப்சை (12) முந்தி, 2 வது இடம் பிடித்தார் ஸ்மித் (13, ஆஸி.,). முதலிடத்தில் பிராட்மேன் (19, ஆஸி.,) உள்ளார்.

* டெஸ்ட் அரங்கில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் பிராட்மேனுக்கு (19 சதம், எதிர்-இங்கிலாந்து) அடுத்த இடத்தை, இந்தியாவின் கவாஸ்கர் (13, வெ.இண்டீஸ்), இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் (13, இந்தியா) பகிர்ந்து கொண்டார் ஸ்மித் (13).

* ஆஷஸ் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ஜாக் ஹாப்சை (3,636) முந்திய ஸ்மித் (3,682 ரன்), 2வது இடம் பெற்றார். 5,028 ரன் எடுத்துள்ள பிராட்மேன், 'நம்பர்-1' ஆக உள்ளார்.

* டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் டிராவிட்டை (36 சதம்) முந்திய ஸ்மித் (37), 6வது இடம் பிடித்தார். 'டாப்-5' இடத்தில் சச்சின் (51, இந்தியா), காலிஸ் (45, தெ.ஆப்.,), பாண்டிங் (41, ஆஸி.,), ரூட் (41, இங்கிலாந்து), சங்ககரா (38, இலங்கை) உள்ளனர்.

152 பந்து

நேற்று ஹெட், 152 பந்தில் 150 ரன்களை எட்டினார். ஆஷஸ் அரங்கில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 150 ரன் வரிசையில் இது 3வது இடம் பெற்றது. முதல் இரு இடத்தில் கில்கிறிஸ்ட் (141, 2001, ஆஸி.,), ஹெட் (143, 2021, பிரிஸ்பேன்) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us