தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நூறாவது டெஸ்டில் அஷ்வின் கலக்கல்

நூறாவது டெஸ்டில் அஷ்வின் கலக்கல்

நூறாவது டெஸ்டில் அஷ்வின் கலக்கல்


ADDED : மார் 09, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மசாலா: இந்தியா வந்த இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலை பின்னணி கொண்ட தர்மசாலா மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 259 ரன் முன்னிலை பெற்றது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டர்கள் சொதப்பினர். முதுகு பிடிப்பால் ரோகித் ஓய்வெடுக்க, கேப்டனாக செயல்பட்ட பும்ரா, அஷ்வினுடன் இணைந்து பந்துவீச்சை துவக்கினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

டக்கெட் (2), கிராலே (0), போப் (19) உள்ளிட்ட 'டாப்-3' பேட்டர்களையும் தனது முதல் 5 ஓவரில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் அஷ்வின். தனது 100வது டெஸ்டில் பங்கேற்ற பேர்ஸ்டோவை, வழக்கம் போல 39 ரன்னில் (இதற்கு முன் 37, 10, 25, 26, 0, 4, 38, 30, 29) அவுட்டாக்கினார் குல்தீப்.

மீண்டும் வந்த அஷ்வின், இம்முறை ஸ்டோக்ஸ் (2), போக்ஸ் (8) என இருவரையும் போல்டாக்க, இங்கிலாந்து தோல்வி உறுதியானது. போட்டியின் 35வது ஓவரை வீசிய பும்ரா, 2 வது பந்தில் ஹார்ட்லே (20), 4வது பந்தில் மார்க் உட்டை (0) வெளியேற்றி, வெற்றியை எளிதாக்கினார்.

அரைசதம் அடித்த ஜோ ரூட் (84), குல்தீப் 'சுழலில்' சிக்கினார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது.இந்திய அணி இன்னிங்ஸ் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 4-1 என வசப்படுத்தி, கோப்பை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியின் அஷ்வின் இரு இன்னிங்சில் 9 விக்கெட் சாய்த்தார். நுாறாவது டெஸ்டில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் அஷ்வின்.

100வது டெஸ்டில் அசத்திய 'டாப்-5' பவுலர்கள்

பவுலர்/அணி சிறந்த பவுலிங் எதிரணி/இடம் ஆண்டு

அஷ்வின்/இந்தியா 9/128 இங்கிலாந்து/தர்மசாலா 2024

முரளிதரன்/இலங்கை 9/141 வங்கதேசம்/சாட்டோகிராம் 2006

வார்ன்/ஆஸி., 8/231 தென் ஆப்ரிக்கா/கேப்டவுன் 2002

கபில்தேவ்/இந்தியா 7/151 பாகிஸ்தான்/கராச்சி 1989

கும்ளே/இந்தியா 7/176 இலங்கை/ஆமதாபாத் 2000

இரண்டு '4'

100வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 4 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் ஆனார் அஷ்வின் (4+5).

* தனது முதல் டெஸ்ட் (6/47, வெ.இண்டீஸ்), 100வது டெஸ்டில் (5/77) ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுக்கும் மேல் சாய்த்த முதல் பவுலர் அஷ்வின்.

* 100வது டெஸ்டில் 5 விக்கெட்டுக்கும் மேல் சாய்த்த 4வது பவுலர் ஆனார் அஷ்வின். வார்ன் (6/161), கும்ளே (5/89), முரளிதரன் (6/54) முதல் 3 இடத்தில் உள்ளனர்.

* சொந்தமண்ணில் ஒரு அணிக்கு (இங்கிலாந்து) எதிரான டெஸ்டில் 100 விக்கெட் (18 போட்டி) சாய்த்த முதல் இந்தியர் ஆனார் அஷ்வின். இதற்கு முன் ஹர்பஜன் 86 விக்கெட் சாய்த்ததே (ஆஸி.,) அதிகம். சர்வதேச அளவில் இங்கிலாந்தின் பிராட் (106, ஆஸி.,), ஆண்டர்சன் (105, இந்தியா) இதுபோல அசத்தினர்.

* சொந்தமண்ணில் ஒரு அணிக்கு எதிராக (இங்கிலாந்து) 5 விக்கெட்டுக்கும் மேல் 8 முறை வீழ்த்திய முதல் இந்தியர் ஆனார் அஷ்வின்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us