/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் குடும்பம்... கிரிக்கெட் ஆர்வம்
/
அஷ்வின் குடும்பம்... கிரிக்கெட் ஆர்வம்
ADDED : மார் 07, 2024 10:48 PM

ராஜ்கோட் டெஸ்டில் அசத்திய அஷ்வின், 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனை தருணத்தில் அவரது தாய் சித்ராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது வேதனையானது. சென்னை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடனே சென்னை திரும்பிய அஷ்வின், மருத்துவமனைக்கு சென்றார். அவரை பார்த்த தாய்,'இங்கு ஏன் வந்தாய்...டெஸ்ட் போட்டி நடக்கிறது. நீ திரும்பவும் ராஜ்கோட் செல்ல வேண்டும்,' என அறிவுறுத்தியிருக்கிறார். இதற்கேற்ப ராஜ்கோட் சென்று எஞ்சிய போட்டியில் பங்கேற்றார். நேற்று 100வது டெஸ்டில் விளையாடினார்.
இது குறித்து அஷ்வினின் இளமைக்கால பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம் கூறுகையில்,''அஷ்வின் தாய் சொன்ன விஷயத்தில் வியப்பு எதுவும் இல்லை. அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர்கள். உடல்நலத்தைவிட கிரிக்கெட்டுக்கு தான் முன்னுரிமை கொடுப்பர். டெஸ்ட் போட்டியில் விளையாட பிறந்தவர் அஷ்வின். சிறந்த வீரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கை அப்போதே இருந்தது. தரமாக பந்துவீசுகிறார். 40 வயது வரை சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்,'' என்றார்.

