தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சிட்னி அணியில் அஷ்வின்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்

சிட்னி அணியில் அஷ்வின்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்

சிட்னி அணியில் அஷ்வின்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்


ADDED : செப் 24, 2025 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 10:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிட்னி: 'பிக் பாஷ் லீக்' தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அஷ்வின் விளையாட உள்ளார்.

இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 39. டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில் கும்ளேவுக்கு (619) அடுத்து, 2வது இடத்தில் உள்ளார் அஷ்வின் (537). கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரிமியர் லீக் அரங்கில் சென்னை (2008-15, 2025), புனே (2016), பஞ்சாப் (2018-19), டில்லி (2020-21), ராஜஸ்தான் (2022-24) அணிகளுக்காக களமிறங்கினார். சமீபத்தில் பிரிமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஷ்வின்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'பிக் பாஷ் லீக்' 15வது சீசனில் (டிச. 15 - 2026, ஜன. 26) சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார் அஷ்வின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசனுக்கான (டிச. 2 - 2026, ஜன. 4) வீரர்கள் ஏலத்தில் (அக். 1) இடம் பெற்றுள்ள அஷ்வின், தேர்வாகும் பட்சத்தில், 'பிக் பாஷ் லீக்' தொடரில் பின்பாதியில் களமிறங்குவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us