/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் 'சுழலா'... நடராஜன் 'வேகமா': சென்னையில் இன்று தகுதிச் சுற்று-2
/
அஷ்வின் 'சுழலா'... நடராஜன் 'வேகமா': சென்னையில் இன்று தகுதிச் சுற்று-2
அஷ்வின் 'சுழலா'... நடராஜன் 'வேகமா': சென்னையில் இன்று தகுதிச் சுற்று-2
அஷ்வின் 'சுழலா'... நடராஜன் 'வேகமா': சென்னையில் இன்று தகுதிச் சுற்று-2
ADDED : மே 23, 2024 10:59 PM

சென்னை: சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் அரையிறுதி போன்ற தகுதிச் சுற்று-2ல் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெல்லும் அணி கோல்கட்டாவுடன் பைனலில் (மே 26) மோதும்.
'எலிமினேட்டர்' போட்டியில் பெங்களூருவை வென்ற உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது. ரியான் பராக் (567 ரன்), கேப்டன் சாம்சன் (521), ஜெய்ஸ்வால் (393) ரன் மழை பொழியலாம். பின்வரிசையில் ஹெட்மயர், துருவ் ஜூரெல் கைகொடுத்தால் நல்லது. தமிழக 'சுழல்' நாயகன் அஷ்வின், 14 போட்டியில், 9 விக்கெட் சாய்த்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் இவருக்கு சாதகம். சகால் (18 விக்கெட்) ஒத்துழைப்பு தரலாம். 'வேகத்தில்' அவேஷ் கான் (16 விக்கெட்), பவுல்ட் (13) நம்பிக்கை தருகின்றனர்.
பலமான பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு துவக்கத்தில் 'டிராவிஷேக்' (டிராவிஸ் ஹெட், 533 + அபிஷேக் சர்மா, 470 ) கூட்டணி மிரட்டலாம். கிளாசன் (413 ரன்), நிதிஷ் குமார் ரெட்டி (285) கைகொடுக்க வாய்ப்பு உண்டு. 'வேகத்தில்' மிரட்டும் தமிழகத்தின் நடராஜன், 12 போட்டியில், 18 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவருக்கும் சேப்பாக்கம் மைதானம் பரிச்சயமானது. புவனேஷ்வர் குமார் (11 விக்கெட்), கேப்டன் கம்மின்ஸ் (16) இருப்பது பலம்.

