sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் யார்... யார்: குழப்பத்தில் தேர்வாளர்கள்

/

ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் யார்... யார்: குழப்பத்தில் தேர்வாளர்கள்

ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் யார்... யார்: குழப்பத்தில் தேர்வாளர்கள்

ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் யார்... யார்: குழப்பத்தில் தேர்வாளர்கள்


ADDED : ஆக 15, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 15, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் தொடர்வாரா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சிராஜ் வாய்ப்பு பெறுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வரும் 19ல் அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போது டெஸ்டிற்கு சுப்மன் கில், ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மா, 'டி-20'க்கு சூர்யகுமார் என மூன்று கேப்டன்கள் உள்ளனர். வரும் 2026ல் இந்தியா, இலங்கையில் நடக்க இருக்கும் 'டி-20' உலக கோப்பைக்கு முன் மூன்றுவித போட்டிக்கும் கேப்டனாக சுப்மனை நியமிக்க பி.சி.சி.ஐ., விரும்புகிறது. ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஒருநாள் போட்டிக்கான தலைமை பொறுப்பு சுப்மன் வசம் வந்துவிடும்.

வெற்றி கேப்டன்: 'டி-20' அரங்கில் தான் பிரச்னை உள்ளது. சூர்யகுமார் தலைமையில் இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றார். கேப்டனாக 22 'டி-20' போட்டிகளில் 17ல் வெற்றி தேடித் தந்தார். 4 தோல்வி, ஒரு போட்டி 'டை' ஆனது. வெற்றி சதவீதம் 77.27. 'மிஸ்டர் 360 டிகிரி' வீரரான இவரது அதிரடி பேட்டிங் கூடுதல் பலம்.

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் என 'டாப் ஆர்டர்' வலுவாக உள்ளது. 'ஆல்-ரவுண்டர்' பணிக்கு ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டன் அக்சர் படேல், ஷிவம் துபே உள்ளனர். ரிங்கு சிங் 'பார்ம்' இல்லாமல் தவிப்பத பலவீனம். பந்துவீச்சில் கைகொடுக்க ஆர்ஷ்தீப் சிங், பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளனர்.

சுப்மன் எதிர்பார்ப்பு: இப்படி 'டி-20' அணி 'செட்டிலாகி' இருப்பதால் மாற்றம் செய்வது கடினம். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் கேப்டனாக அசத்திய சுப்மன் (754 ரன்), பிரிமியர் 'டி-20' தொடரில் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக 650 ரன் (ஸ்டிரைக் ரேட் 156) எடுத்தார். இதனால், 'டி-20' அணியில் இடம் கேட்கிறார். அதிரடியாக ஆடும் ஜெய்ஸ்வால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 23 விக்கெட் சாய்த்த சிராஜும் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். இதனால் தேர்வுக்குழு தலைவர் அகார்கர், பயிற்சியாளர் காம்பிருக்கு தரமான அணியை கண்டறிவதில் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

கடினமான பணி: இது பற்றி பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''சமீபத்தில் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்புக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட சூர்யகுமார் தேறிவிட்டார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறார். இவரே ஆசிய கோப்பை தொடரிலும் கேப்டனாக நீடிப்பார். முந்தைய அணியே தொடர வாய்ப்பு உள்ளது. 'டி-20' போட்டிகளில் அசத்தக்கூடிய சுப்மன் கில்லை சேர்த்தால், யாரை நீக்குவது என்ற குழப்பம் ஏற்படும். ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெறுவது கடினம். டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தும்படி ஜெய்ஸ்வால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா என அனைவரும் 'பார்மில்' உள்ளதால், தேர்வுக்குழுவினருக்கு கடின சவால் காத்திருக்கிறது,''என்றார்.






      Dinamalar
      Follow us