ADDED : நவ 18, 2025 11:15 PM

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை ('டி-20') 7வது சீசன் நடக்கிறது. இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', வங்கதேசம் 'ஏ', ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ', ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய 'ஏ' பீல்டிங் செய்தது. ஓமன் அணிக்கு கேப்டன் ஹம்மத் (32), வாசிம் அலி (54*) கைகொடுக்க, 20 ஓவரில் 135/7 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய 'ஏ' அணிக்கு வைபவ் (12), பிரியான்ஷ் (10) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. நமன் 30, நேஹல் 23 ரன் எடுத்தனர். இந்திய 'ஏ' அணி 17.5 ஓவரில் 138/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஹர்ஷ் துபே (53), கேப்டன் ஜிதேஷ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 'பி' பிரிவில் 4 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

