sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சாம்சனுக்கு கிடைக்குமா வாய்ப்பு * கவாஸ்கர் கணிப்பு

/

சாம்சனுக்கு கிடைக்குமா வாய்ப்பு * கவாஸ்கர் கணிப்பு

சாம்சனுக்கு கிடைக்குமா வாய்ப்பு * கவாஸ்கர் கணிப்பு

சாம்சனுக்கு கிடைக்குமா வாய்ப்பு * கவாஸ்கர் கணிப்பு


ADDED : செப் 06, 2025 10:52 PM

Google News

ADDED : செப் 06, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய லெவன் அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் (செப். 9--28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சானலில் காணலாம். தவிர, 'சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ்' சேனலில் தமிழ் மொழியில் வர்ணனை செய்யப்பட உள்ளது.

ஆசிய கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி:

* சஞ்சு சாம்சனுக்கு 'லெவனில்' வாய்ப்பு கிடைக்குமா?

கீப்பர்-பேட்டர் சாம்சனுக்கு துவக்கத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு தரப்படலாம். 'டாப்-3' அல்லது பின் வரிசை, 'பினிஷிங்' என அனைத்து இடத்திலும் அசத்துவார். பிரிமியர் தொடரில் 'பினிஷராக' ஜொலித்த கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் போட்டியில் உள்ளதால், தேர்வுக்குழுவுக்கு தலைவலி தான்.

* துவக்கத்தில் சுப்மன்-அபிஷேக் அல்லது சாம்சன்-அபிஷேக் என எந்த ஜோடிக்கு முக்கியத்துவம் தருவீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் சுப்மன்-அபிஷேக் ஜோடிக்கு துவக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

* ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் உள்ள நிலையில், குல்தீப்பிற்கு இடம் கிடைக்குமா?

முதல் போட்டியில் வருண் இடம் பெறலாம். வருண், அக்சர், குல்தீப்புடன், 2 வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்றாவது 'வேகத்திற்கு' ஹர்திக் பாண்ட்யா என, இந்திய அணி 6 பவுலர்களுடன் களமிறங்கலாம்.

* பும்ராவின் 'டி-20' செயல்பாடு எப்படி இருக்கும்?

பும்ரா திறமை குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. 'டி-20'ல் 4 ஓவர் மட்டும் வீசுவார் என்பதால், இவருக்கு பணிச்சுமை இருக்காது.

* டெஸ்ட் போட்டிகளைப் போல, 'டி-20'ல் அசத்துவாரா சுப்மன் கில்?

பிரிமியர் தொடரில் ரன் மழை பொழிந்த சுப்மன், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்.






      Dinamalar
      Follow us