/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரையிறுதியில் இளம் இந்தியா * ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்
/
அரையிறுதியில் இளம் இந்தியா * ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்
அரையிறுதியில் இளம் இந்தியா * ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்
அரையிறுதியில் இளம் இந்தியா * ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்
ADDED : டிச 04, 2024 11:04 PM

சார்ஜா: ஆசிய கோப்பை (19 வயது) தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் யு.ஏ.இ., அணியை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி பேட்டிங் தேர்வு செய்தது.
குஹா 'மூன்று'
யு.ஏ.இ., அணிக்கு ஆர்யன் சக்சேனா (9), அக்சத் ராய் (26) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. யாயின் (0) ஏமாற்ற, ஈதன் டிசவுசா (17), முகமது ராயன் (35) மிடில் ஆர்டரில் சற்று கைகொடுத்தனர். கேப்டன் அப்சல் கான் 5 ரன் மட்டும் எடுத்தார். மற்ற வீரர்கள் அணியை கைவிட, யு.ஏ.இ., அணி 44 ஓவரில் 137 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3, சேட்டன் சர்மா 2, ஹர்திக் ராஜ் 2 விக்கெட் சாய்த்தனர்.
சூர்யவன்ஷி அபாரம்
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு 13 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஸ் மாட்ரே ஜோடி சூப்பர் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஆயுஸ் பவுண்டரிகளாக விளாச, மறுபக்கம் சூர்யவன்ஷி சிக்சர் மழை பொழிந்தார். இருவரும் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்தனர். கடைசியில் சூர்யவம்ஷி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 16.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யவம்ஷி 76, (6x6, 3x4), ஆயுஸ் 67 (4x6, 4x4) ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
அரையிறுதி தகுதி
லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் இந்தியா 4 புள்ளி பெற்றது. பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நாளை இலங்கையுடன் மோத உள்ளது.