இந்தியா-ஜப்பான் மோதல் * ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில்
இந்தியா-ஜப்பான் மோதல் * ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில்
ADDED : ஜூலை 23, 2026 10:53 PM

புதுடில்லி: சிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோத உள்ளன.
ஜப்பானில் ஆசிய விளையாட்டு வரும் செப். 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. நான்காவது முறையாக (2010, 2014, 2022, 2026) கிரிக்கெட் போட்டி ('டி-20') இடம் பெற்றுள்ளது.
இம்முறை இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகின்றன.
இதில் பெண்கள் கிரிக்கெட் செப். 17-22ல் நடக்க உள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நீடிக்கிறார். இதற்கான அட்டவணை வெளியானது. அனைத்து போட்டிகளும் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.
இந்திய அணி காலிறுதியில் ஜப்பானை சந்திக்க உள்ளது. அரையிறுதியில் வங்கதேசம் அல்லது சீனாவை சந்திக்கி நேரிடலாம்.
ஆண்கள் வாலிபாலில் இந்தியா, 'சி' பிரிவில் கத்தார், வியட்நாம், ஹாங்காங் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஆண்களுக்கான கபடியில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் வங்கதேசம், ஜப்பான், சீன தைபேவுடன் இடம் பிடித்துள்ளது.
