தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஷஸ் டெஸ்ட் எப்போது: அட்டவணை வெளியீடு

ஆஷஸ் டெஸ்ட் எப்போது: அட்டவணை வெளியீடு

ஆஷஸ் டெஸ்ட் எப்போது: அட்டவணை வெளியீடு


ADDED : ஜூலை 23, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 09:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜூன் 18ல் நாட்டிங்காமில் துவங்குகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள், 1882 முதல் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 74 சீசன் முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 35, இங்கிலாந்து 32 முறை தொடரை கைப்பற்றின. ஏழு முறை தொடர் சமன் ஆனது. கடந்த 2025-26 சீசனில் ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 75வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கான போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்படுகிறது. முதல் போட்டி, ஜூன் 18ல் நாட்டிங்காமில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்குகிறது. மற்ற போட்டிகள் லண்டன், லார்ட்ஸ் (ஜூன் 30 - ஜூலை 4), பர்மிங்காம் (ஜூலை 8-12), சவுத்தாம்ப்டன் (ஜூலை 21-25), லண்டன், ஓவலில் (ஜூலை 29 - ஆக. 2) நடக்கவுள்ளன. சவுத்தாம்ப்டனில் முதல் முறையாக ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. மான்செஸ்டர், லீட்ஸ் மைதானங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us