sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

/

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி


ADDED : நவ 16, 2024 10:03 PM

Google News

ADDED : நவ 16, 2024 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: இரண்டாவது 'டி-20' போட்டியில் 13 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. சிட்னியில் இரண்டாவது போட்டி நடந்தது.

'டாஸ்' வென்ற முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் பிரேசர்-மெக்குர்க் (20), மாத்யூ ஷார்ட் (32) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் ஜோஷ் இங்லிஸ் (0) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் (21), ஆரோன் ஹார்டி (28), டிம் டேவிட் (18) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப் 4, அபாஸ் அப்ரிதி 3 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் (16), பாபர் ஆசம் (3) ஏமாற்றினர். உஸ்மான் கான் (52) நம்பிக்கை தந்தார். பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 134 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இர்பான் கான் (37) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் 5 விக்கெட் சாய்த்த ஸ்பென்சர் ஜான்சன், ஆட்ட நாயகன் விருது வென்றார்.






      Dinamalar
      Follow us