தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து அணி திணறல்

ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து அணி திணறல்

ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு: இங்கிலாந்து அணி திணறல்


ADDED : டிச 18, 2025 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிலெய்டு: மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த, இங்கிலாந்து அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326/8 ரன் எடுத்திருந்தது. ஸ்டார்க் (33) அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்டார்க் அரைசதம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்டார்க் (54) அரைசதம் கடந்தார். ஆர்ச்சர் 'வேகத்தில்' லியான் (9) வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்காட் போலந்து (14) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

கம்மின்ஸ் கலக்கல்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறியது. கேப்டன் கம்மின்ஸ் 'வேகத்தில்' ஜாக் கிராலே (9) அவுட்டானார். நாதன் லியான் 'சுழலில்' போப் (3), பென் டக்கெட் (29) சிக்கினர். தொடர்ந்து அசத்திய கம்மின்ஸ் பந்தில் ஜோ ரூட் (19), ஜேமி ஸ்மித் (22) வெளியேறினர். ஹாரி புரூக் (45) ஓரளவு கைகொடுத்தார். வில் ஜாக்ஸ் (6) ஏமாற்றினார். இங்கிலாந்து அணி 168/8 ரன் எடுத்து திணறியது.

பின் இணைந்த கேப்டன் ஸ்டோக்ஸ் (45), ஆர்ச்சர் (30) ஜோடி அவுட்டாகாமல் இருந்து ஆறுதல் தந்தது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 213/8 ரன் எடுத்து, 158 ரன் பின்தங்கி இருந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3, லியான், ஸ்காட் போலந்து தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

லியான் '564'

இங்கிலாந்தின் டக்கெட்டை அவுட்டாக்கிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர்கள் பட்டியலில் மெக்ராத்தை (563 விக்கெட், 124 டெஸ்ட்) முந்தி 2வது இடம் பிடித்தார். இதுவரை 141 டெஸ்டில், 564 விக்கெட் சாய்த்துள்ளார். முதலிடத்தில் 'சுழல்' ஜாம்பவான் ஷேன் வார்ன் (708 விக்கெட், 145 டெஸ்ட்) உள்ளார்.

* டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறினார் லியான். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட், 133 டெஸ்ட்) உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us