ADDED : ஏப் 14, 2025 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தாமதமாக பந்துவீசியதால் டில்லி அணி கேப்டன் அக்சர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டில்லியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி (205/5), 12 ரன் வித்தியாசத்தில் டில்லி அணியை (193/10) வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது. டில்லி அணி முதல் தோல்வியை பெற்றது. இப்போட்டியில் டில்லி அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். இப்படி தாமதமாக பந்துவீசியது முதன்முறை என்பதால் டில்லி அணி கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.