/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
/
பாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
பாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
பாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
ADDED : ஆக 21, 2024 10:32 PM

கோவை: புச்சி பாபு கிரிக்கெட்டில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணியின் பாபா இந்திரஜித் சதம் விளாசினார்.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) லெவன், ஹரியானா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த டி.என்.சி.ஏ., லெவன் அணிக்கு லோகேஷ்வர் (99), பாபா இந்திரஜித் (139*, 'ரிட்டயர்ட் ஹர்ட்') நம்பிக்கை அளித்தனர். முதல் நாள் முடிவில் டி.என்.சி.ஏ., லெவன் அணி முதல் இன்னிங்சில் 329/2 ரன் எடுத்திருந்தது.
சித்தார்த் அரைசதம்: சேலத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன், இந்தியன் ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பிரசிடென்ட் லெவன் அணிக்கு விமல் குமார் (42), மாதவ பிரசாத் (47) ஓரளவு கைகொடுத்தனர். முகமது அலி (62*), ஆன்ட்ரி சித்தார்த் (81) அரைசதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 283/6 ரன் எடுத்திருந்தது.
ஜார்க்கண்ட் '178': திருநெல்வேலியில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஜார்க்கண்ட், ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னுக்கு சுருண்டது. ஷரண்தீப் சிங் (78) ஆறுதல் தந்தார். ஐதராபாத் சார்பில் தனய் தியாகராஜன் 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது.
பரோடா '255': திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் ஜம்மு காஷ்மீர், பரோடா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பரோடா அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. காஷ்மீர் சார்பில் சாஹில் லோத்ரா 5 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநேர முடிவில் காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 29/2 ரன் எடுத்திருந்தது.

