/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாட்மின்டன்: பிரியான்ஷு ஏமாற்றம்
/
பாட்மின்டன்: பிரியான்ஷு ஏமாற்றம்
UPDATED : செப் 17, 2024 04:08 PM
ADDED : செப் 16, 2024 05:15 PM

செங்டு: சீன ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
சீனாவில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிந்து, லக்சயா, சாத்வித்சாய்ராஜ், சிராக் ஷெட்டி என பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கவில்லை.
நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ராவத், கனடாவின் பிரியன் யங் மோதினர்.
முதல் செட்டை பிரியான்ஷு 13-21 என கோட்டை விட்டார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் போராடிய போதும் 16-21 என நழுவவிட்டார்.
முடிவில் பிரியான்ஷு 13-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.