/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
/
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
ADDED : நவ 20, 2025 10:35 PM

மிர்புர்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம் விளாச, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 476 ரன் குவித்தது.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 292/4 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் (99), லிட்டன் தாஸ் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது 100வது டெஸ்டில் விளையாடும் முஷ்பிகுர், 13வது சதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது முஷ்பிகுர் (106) அவுட்டானார். அபாரமாக ஆடிய லிட்டன் தாஸ், டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதமடித்தார். மெஹிதி ஹசன் மிராஸ் (47) ஓரளவு கைகொடுத்தார். லிட்டன் தாஸ் 128 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 476 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிர்னி 6 விக்கெட் சாய்த்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஆன்டி பால்பிர்னி (21), பால் ஸ்டிர்லிங் (27) சுமாரான துவக்கம் கொடுத்தனர். கேட் கார்மைக்கேல் (17), ஹாரி டெக்டர் (14) நிலைக்கவில்லை. கர்டிஸ் கேம்பர் (0) ஏமாற்றினார்.
ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 98/5 ரன் எடுத்திருந்தது. வங்கதேசம் சார்பில் ஹசன் முராத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

