/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கதேச அணி ரன் குவிப்பு: அயர்லாந்து பவுலர்கள் திணறல்
/
வங்கதேச அணி ரன் குவிப்பு: அயர்லாந்து பவுலர்கள் திணறல்
வங்கதேச அணி ரன் குவிப்பு: அயர்லாந்து பவுலர்கள் திணறல்
வங்கதேச அணி ரன் குவிப்பு: அயர்லாந்து பவுலர்கள் திணறல்
ADDED : நவ 12, 2025 10:22 PM

சைல்ஹெட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், வங்கதேசத்தின் மகமுதுல்லா ஹசன் ஜாய் சதம் விளாசினார்.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சைல்ஹெட் நகரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 270/8 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாரி மெக்கர்த்தி (31) ஓரளவு கைகொடுக்க, அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட் சாய்த்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு மகமதுல்லா ஹசன் ஜாய், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஷாத்மன் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 168 ரன் சேர்த்த போது ஷாத்மன் (80) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஹசன் ஜாய், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மோமினுல் ஹக், அரைசதம் விளாசினார். இவர்களை பிரிக்க முடியாமல் அயர்லாந்து பவுலர்கள் திணறினர்.
ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 338/1 ரன் எடுத்து, 52 ரன் முன்னிலையில் இருந்தது. ஹசன் ஜாய் (169), மோமினுல் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.

