/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது வங்கதேசம்: அயர்லாந்து மீண்டும் தோல்வி
/
கோப்பை வென்றது வங்கதேசம்: அயர்லாந்து மீண்டும் தோல்வி
கோப்பை வென்றது வங்கதேசம்: அயர்லாந்து மீண்டும் தோல்வி
கோப்பை வென்றது வங்கதேசம்: அயர்லாந்து மீண்டும் தோல்வி
ADDED : நவ 23, 2025 11:13 PM

மிர்புர்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில், 217 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
வங்கதேசம் சென்ற அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 476, 265 ரன் எடுத்தன. வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 297/4 ('டிக்ளேர்') ரன் எடுத்தது.
பின், 509 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 4ம் நாள் முடிவில் 176/6 ரன் எடுத்திருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அயர்லாந்து அணியின் கர்டிஸ் கேம்பர் அரைசதம் கடந்தார். ஆன்டி மெக்பிர்னி (21) நிலைக்கவில்லை. ஜோர்டான் நீல் (30), கவின் ஹோய் (37) ஆறுதல் தந்தனர்.
அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 291 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் தைஜுல், ஹசன் முராத் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

