/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'கூச் பெஹார்' டிராபி: தமிழகம் அபாரம்
/
'கூச் பெஹார்' டிராபி: தமிழகம் அபாரம்
UPDATED : நவ 23, 2025 11:07 PM
ADDED : நவ 22, 2025 11:04 PM

தேனி: 'கூச் பெஹார்' டிராபி லீக் போட்டியில் பீஹார் அணி முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது.
தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடக்கும் 'கூச் பெஹார்' டிராபி (19 வயது) 'ஏ' பிரிவு 2வது சுற்று லீக் போட்டியில் (4 நாள்) தமிழகம், பீஹார் அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பீஹார் அணி முதல் இன்னிங்சில் (72.5 ஓவர்) 203 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முகமது ஆலம் (51), பிரிதம் ராஜ் (46*), பிரியான்ஷு குமார் (32) ஆறுதல் தந்தனர். தமிழகம் சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய ஷவின் 4 விக்கெட் சாய்த்தார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணி 3/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.

