/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தானை சமாளிக்குமா வங்கம் * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
/
பாகிஸ்தானை சமாளிக்குமா வங்கம் * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
பாகிஸ்தானை சமாளிக்குமா வங்கம் * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
பாகிஸ்தானை சமாளிக்குமா வங்கம் * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
ADDED : ஆக 20, 2024 11:27 PM

ராவல்பிண்டி: பாகிஸ்தான், வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று ராவல்பிண்டியில் துவங்குகிறது. இதில் பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற காத்திருக்கிறது.
ஐ.சி.சி., சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியா (68.52%), ஆஸ்திரேலியா (62.50) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் (36.66, 6வது இடம்) சென்றுள்ள வங்கதேச அணி (25.00, 8வது), இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
கேப்டன் நம்பிக்கை
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-0 என வீழ்த்தியது, வங்கதேசத்திற்கு எதிரான 14 டெஸ்டில் 13ல் வென்றது (1 'டிரா', 2015) என, நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கேப்டன் ஷான் மசூது, அனுபவ பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், 'சீனியர்' சர்பராஸ் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.
பவுலிங்கில் ஷஹீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா கூட்டணி வெற்றியை எளிதாக்க காத்திருக்கிறது.
சாகிப் பலமா
சொந்தமண்ணில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, வங்கதேச அணியின் நான்கு நாள் முன்னதாக பாகிஸ்தான் சென்றனர். இங்கு லாகூரில் 3 நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். சீனியர் 'ஆல் ரவுண்டர்' சாகிப் அல் ஹசன், கேப்டன் நஜ்முல் ஷாண்டோ, முஷ்பிகுர் ரஹிம் அணிக்கு உதவ வேண்டும். பந்து வீச்சில் தய்ஜுல் இஸ்லாம், ஷோரிபுல், டஸ்கின் அகமது திருப்பம் ஏற்படுத்த உள்ளனர்.

