/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டது வங்கதேசம் * ஷாத்மன், முஷ்பிகுர் அரைசதம்
/
மீண்டது வங்கதேசம் * ஷாத்மன், முஷ்பிகுர் அரைசதம்
ADDED : ஆக 23, 2024 11:28 PM

ராவல்பிண்டி: ஷாத்மன், முஷ்பிகுர் அரைசதம் கைகொடுக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 316/5 ரன் எடுத்திருந்தது.
பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 448/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி, 27/0 ரன் எடுத்திருந்தது. ஷாத்மன் இஸ்லாம் (12), ஜாகிர் ஹசன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஷாத்மன் அபாரம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் (12), கேப்டன் ஷாண்டோ (12) அவுட்டான போதும் மோமினுல் (50) அரைசதம் விளாசினார். ஷாத்மன் 93 ரன் எடுத்து, முகமது அலி பந்தில் போல்டானார். சாகில் அல் ஹசன் (15) நீடிக்கவில்லை. பின் இணைந்த லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர்.
மூன்றாவது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 316/5 ரன் எடுத்து, 132 ரன் பின்தங்கி இருந்தது. முஷ்பிகுர் (55), லிட்டன் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.