/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி * வீழ்ந்தது வங்கதேசம்
/
வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி * வீழ்ந்தது வங்கதேசம்
ADDED : நவ 26, 2024 11:10 PM

ஆன்டிகுவா: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 450/9 (டிக்ளேர்), வங்கதேசம் 269/9 (டிக்ளேர்) ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்னுக்கு சுருண்டது.
பின் 334 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது வங்கதேசம். நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்து திணறியது.
வேகமான வெற்றி
நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அல்ஜாரி ஜோசப் பந்தில் ஹசன் முகமது 'டக்' அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இவர், நீண்ட நேரம் தொல்லை தந்த ஜேக்கர் அலியை (31) வெளியேற்றினார். பின் வந்த ஷோரிபுல் இஸ்லாம், ஜோசப் பவுன்சரில் இருந்து தப்பிக்க, குனிந்தார். பந்து ஷோரிபுல் வலது பக்க தோளில் தாக்கியது.
இவர் 1 ரன் மட்டும் எடுத்த நிலையில் 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். இதையடுத்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.