/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பி.சி.சி.ஐ., செயலர் ரோஹன் ஜெட்லி
/
பி.சி.சி.ஐ., செயலர் ரோஹன் ஜெட்லி
ADDED : நவ 04, 2024 10:56 PM

புதுடில்லி: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக ரோஹன் ஜெட்லி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது 2வது கட்ட பதவிக்காலம், இம்மாதத்துடன் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார். புதிய சேர்மனாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா, டிசம்பர் 1 ல் பொறுப்பேற்கிறார்.
கடந்த 2019 முதல் பி.சி.சி.ஐ., செயலராக உள்ள ஜெய் ஷா, இம்மாதம் பதவி விலகுகிறார். இவருக்குப் பதில் புதிய செயலராக டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி, குஜராத் கிரிக்கெட் சங்க செயலர் அனில் படேல் என யாராவது ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகின.
தற்போது புதிய செயராக ரோஹன் ஜெட்லி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்திய அணி முன்னாள் வீரர் ரோஜர் பின்னி, தலைவராக தொடர உள்ளார்.