/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது வங்கம்: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
/
கோப்பை வென்றது வங்கம்: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
ADDED : அக் 24, 2025 09:21 PM

மிர்புர்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் 179 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றியது.
வங்கதேசம் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மிர்புரில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு சைப் ஹசன் (80), சவுமியா சர்கார் (91), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (44) கைகொடுக்க, 50 ஓவரில் 296/8 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவரில் 117 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. அதிகபட்சமாக அகீல் ஹொசைன் 27 ரன் எடுத்தார். வங்கதேசம் சார்பில் நசும் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 3, மெஹிதி ஹசன் மிராஸ், தன்விர் இஸ்லாம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்ட நாயகன் விருதை சவுமியா சர்கார் (91 ரன்), தொடர் நாயகன் விருதை ரிஷாத் ஹொசைன் (68 ரன், 12 விக்.,) வென்றனர்.

