தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா அரைசதம்

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா அரைசதம்

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா அரைசதம்


UPDATED : ஜன 29, 2026 10:49 PM

ADDED : ஜன 29, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2026 10:49 PM ADDED : ஜன 29, 2026 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. லீக் போட்டியில் கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் ஸ்மிருதி மந்தனா அரைசதம் விளாச 8 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி., அணியை வீழ்த்தியது.

வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

உ.பி., அணிக்கு கேப்டன் மெக் லானிங், தீப்தி சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஷ்ரேயங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தீப்தி, லாரன் பெல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். சயாலி பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த லானிங், அருந்ததி ரெட்டி வீசிய 7வது ஓவரில் 4 பவுண்டரி உட்பட 18 ரன் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது நாடின் டி கிளார்க் பந்தில் லானிங் (41) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய நாடின் பந்தில் அமி ஜோன்ஸ் (1) ஆட்டமிழந்தார்.

கிரேஸ் ஹாரிஸ் 'சுழலில்' ஹர்லீன் தியோல் (14), டிரையன் (6) சிக்கினர். லாரன் பெல் 'வேகத்தில்' ஷ்வேதா (7) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய தீப்தி சர்மா, 40 பந்தில் அரைசதம் எட்டினார். ஷ்ரேயங்கா பந்தில் தீப்தி (55) அவுட்டானார். சோபி எக்லெஸ்டோன் 'டக்-அவுட்' ஆனார். நாடின் பந்தில் சிம்ரன் ஷேக் (10) அவுட்டானார்.

உ.பி., அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் நாடின் டி கிளார்க் 4, கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

சூப்பர் துவக்கம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜோடி நம்பிக்கை தந்தது. கிராந்தி வீசிய 3வது ஓவரில் 5 பவுண்டரி உட்பட 20 ரன் விளாசிய கிரேஸ் ஹாரிஸ், ஆஷா சோபனா பந்தை சிக்சருக்கு அனுப்பி, 28 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது ஷிகா பாண்டே பந்தில் கிரேஸ் ஹாரிஸ் (75 ரன், 2x6, 13x4) அவுட்டானார்.

அடுத்து வந்த ஜார்ஜியா (16) நிலைக்கவில்லை. ஷிகா பாண்டே, ஆஷா சோபனா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ஸ்மிருதி, 26 பந்தில் அரைசதம் எட்டினார். தீப்தி சர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மிருதி, வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 13.1 ஓவரில் 147/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி (54 ரன், 2x6, 8x4) அவுட்டாகாமல் இருந்தார். எட்டு போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்த பெங்களூரு அணி நேரடியாக பைனலுக்குள் நுழைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us