UPDATED : ஜூன் 01, 2026 12:29 AM
ADDED : மே 30, 2026 11:03 PM

அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி முதலிடம். இம்முறை 16 போட்டியில், ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 776 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 237.30) குவித்த இவர், அதிக ரன் எடுத்தவருக்கான 'ஆரஞ்ச்' தொப்பி வென்றார். தவிர இவர், சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
'டாப்-4' வீரர்கள்
வீரர்/அணி போட்டி ரன்
வைபவ்/ராஜஸ்தான் 16 776
கில்/குஜராத் 16 732
சுதர்சன்/குஜராத் 17 722
கோலி/பெங்களூரு 16 675
-----------------------------சிக்சர் மன்னன்
இம்முறை 1426 சிக்சர் பதிவானது. அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தை கைப்பற்றினார். இம்முறை விளையாடிய 16 போட்டியில், 72 சிக்சர் பறக்கவிட்டார். அடுத்த இரு இடங்களை ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா (43 சிக்சர்), பெங்களூருவின் ரஜத் படிதார் (42) கைப்பற்றினர்.
ரபாடா ராஜ்யம்
அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் குஜராத் அணியின் ரபாடா முதலிடம். இவர், 17 போட்டியில், 29 விக்கெட் சாய்த்தார். இவருக்கு, அதிக விக்கெட் சாய்த்தவருக்கான 'பர்பிள்' நிற தொப்பி வழங்கப்பட்டது.
'டாப்-3' பவுலர்கள்
வீரர்/அணி போட்டி விக்கெட்
ரபாடா/குஜராத் 17 29
புவனேஷ்வர்/பெங்களூரு 16 28
ஆர்ச்சர்/ராஜஸ்தான் 16 25
பவுண்டரி நாயகன்
இம்முறை 2332 பவுண்டரி விளாசப்பட்டது. அதிக பவுண்டரி விரட்டிய வீரர்கள் வரிசையில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் (75), கேப்டன் சுப்மன் கில் (74) முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர். மூன்றாவது இடத்தை பெங்களூருவின் கோலி (73) பிடித்தார்.
இது அதிகம்
இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 27,450 ரன் குவிக்கப்பட்டது. இது, மற்ற சீசனை விட அதிகம்.
* அதிகபட்சமாக 15 சதம் பதிவானது. இதற்கு முன், 2024ல் 14 சதம் அடிக்கப்பட்டது.
* அதிகபட்சமாக 65 இன்னிங்சில், 200 அல்லது அதற்கு மேல் ஸ்கோர் எடுக்கப்பட்டது. இதற்கு முன், கடந்த ஆண்டு 52 இன்னிங்சில் 200+ ரன் குவிக்கப்பட்டது.
* அதிகபட்சமாக 17 போட்டிகளில், 200 அல்லது அதற்கு மேல் ரன் 'சேஸ்' செய்யப்பட்டது.
மூன்றாவது அணி
கிரிக்கெட் லீக் வரலாற்றில், ஒரே மைதானத்தில் இரு முறை கோப்பை வென்ற 3வது அணியானது பெங்களூரு (ஆமதாபாத்தில் 2025, 2026). ஏற்கனவே மும்பை (கொல்கட்டாவில் 2013, 2015, ஐதராபாத்தில் 2017, 2019), கொல்கட்டா (சென்னையில் 2012, 2024) அணிகள் இப்படி சாதித்தன.
