தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பெங்களூரு அணி வெற்றி: கோலி, படிதர் விளாசல்

பெங்களூரு அணி வெற்றி: கோலி, படிதர் விளாசல்

பெங்களூரு அணி வெற்றி: கோலி, படிதர் விளாசல்


ADDED : ஏப் 25, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: தொடர்ந்து 6 போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணி நேற்று வெற்றியை பதிவு செய்தது. கோலி, படிதர் அரைசதம் விளாசினர்.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. ஐதராபாத் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் டுபிளசி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

படிதர் விளாசல்

பெங்களூரு அணிக்கு விராத் கோலி, டுபிளசி (25) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. வில் ஜாக்ஸ் (6) ஏமாற்றினார். மயங்க் மார்கண்டே வீசிய 11வது ஓவரில் வரிசையாக 4 சிக்சர் உட்பட 27 ரன் விளாசிய படிதர், 19 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது உனத்கட் பந்தில் படிதர் (50) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோலி (51), தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். மஹிபால் லாம்ரர் (7), தினேஷ் கார்த்திக் (11) சோபிக்கவில்லை. நடராஜன் வீசிய கடைசி ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஸ்வப்னில் சிங் (12) கடைசி பந்தில் அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. கிரீன் (37) அவுட்டாகாமல் இருந்தார்.

ஹெட் ஏமாற்றம்

சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (1) ஏமாற்றினார். அபிஷேக் சர்மா (31) ஆறுதல் தந்தார். ஸ்வப்னில் சிங் பந்தில் மார்க்ரம் (7), கிளாசன் (7) அவுட்டாகினர். கரண் சர்மா 'சுழலில்' நிதேஷ் குமார் ரெட்டி (13), அப்துல் சமத் (10) சிக்கினர். ஸ்வப்னில் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் கம்மின்ஸ் (31) ஓரளவு கைகொடுத்தார். கிரீன் பந்தில் புவனேஷ்வர் குமார் (13) அவுட்டானார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 171 ரன் மட்டும் எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷாபாஸ் அகமது (40), உனத்கட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில், கரண் சர்மா, கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

19 பந்தில் அரைசதம்

ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் விளாசிய பெங்களூரு வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை (தலா 19 பந்து) ராபின் உத்தப்பாவுடன் (எதிர்: பஞ்சாப், 2010) பகிர்ந்து கொண்டார் ரஜத் படிதர். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (17 பந்து, எதிர்: புனே, 2013) உள்ளார்.



சிறந்த பந்துவீச்சு

ஐ.பி.எல்., அரங்கில் 100வது போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 5வது பவுலரானார் உனத்கட் (3/30). முதலிடத்தில் டில்லியின் அமித் மிஸ்ரா (4/11, எதிர்: பஞ்சாப், 2016) உள்ளார்.

ஆறாவது முறை

'வேகத்தில்' ஏமாற்றிய கம்மின்ஸ் (55 ரன், 4 ஓவர்) ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை (6) ஒரு இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் வழங்கிய 2வது பவுலரானார். முதலிடத்தில் மோகித் சர்மா (7 முறை) உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us