sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சிறந்த தருணங்கள்: 'டி-20' உலக கோப்பையில்...

/

சிறந்த தருணங்கள்: 'டி-20' உலக கோப்பையில்...

சிறந்த தருணங்கள்: 'டி-20' உலக கோப்பையில்...

சிறந்த தருணங்கள்: 'டி-20' உலக கோப்பையில்...


ADDED : மார் 09, 2026 10:54 PM

Google News

ADDED : மார் 09, 2026 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டி-20' உலக கோப்பை 10வது சீசனில் அரங்கேறிய சிறந்த தருணங்கள்.

* ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் (பிப். 7, கொல்கட்டா) 'வேகத்தில்' மிரட்டிய வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, 'ஹாட்ரிக்' உட்பட 5 விக்கெட் சாய்த்தார். இம்முறை 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரரானார்.

* தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியில் (பிப். 11, ஆமதாபாத்), 2 'சூப்பர் ஓவர்' நடந்தது. இது, 'டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் முறை.

* இம்முறை அறிமுகமான இத்தாலி அணி, லீக் போட்டியில் (பிப். 12, மும்பை) நேபாளத்தை வீழ்த்தி, 'டி-20' உலக கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் (பிப். 13, கொழும்பு) அதிர்ச்சி தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, லீக் சுற்றோடு வெளியேறியது.

* நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் (பிப். 17, சென்னை) கனடாவின் யுவராஜ் சிங் சாம்ரா சதம் (110 ரன்) விளாசினார். 'டி-20' உலக கோப்பை வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் (19 ஆண்டு, 141 நாள்) என்ற சாதனை படைத்தார்.

* அரையிறுதியில் (மார்ச் 4, கொல்கட்டா) அசத்திய நியூசிலாந்து அணி, 'டி-20' உலக கோப்பை அரங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில், 33 பந்தில் சதம் விளாசிய நியூசிலாந்தின் ஆலன், 'டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார்.

* வெஸ்ட் இண்டீஸ் (97* ரன், 'சூப்பர்-8', மார்ச் 1, கொல்கட்டா), இங்கிலாந்து (89 ரன், அரையிறுதி, மார்ச் 5, மும்பை), நியூசிலாந்து (89 ரன், பைனல், மார்ச் 8, ஆமதாபாத்) அணிகளுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன் (321 ரன்) தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

* பைனலில் (மார்ச் 8, ஆமதாபாத்) நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டம் கைப்பற்றிய முதல் அணி, மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற மூன்று சாதனை படைத்தது.






      Dinamalar
      Follow us