/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
7 விக்கெட் சாய்த்த சாய் கிஷோர் * புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
/
7 விக்கெட் சாய்த்த சாய் கிஷோர் * புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
7 விக்கெட் சாய்த்த சாய் கிஷோர் * புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
7 விக்கெட் சாய்த்த சாய் கிஷோர் * புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்
ADDED : ஆக 23, 2024 11:35 PM

கோவை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
கோவையில் நடக்கும் ('சி' பிரிவு) போட்டியில் டி.என்.சி.ஏ., லெவன் (தமிழகம்) அணி, ஹரியானா மோதுகின்றன. முதல் இன்னிங்சில் டி.என்.சி.ஏ., லெவன் அணி 393 ரன் எடுத்தது. நேற்று இரண்டாவது நாளில் ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சாய் கிஷோர் 76 ரன் கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார்.
பின் 175 ரன் முன்னிலையுடன் டி.என்.சி.ஏ., லெவன் அணி, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. பிரதோஷ் (44), பாபா இந்திரஜித் (75) கைகொடுக்க, 177/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. அடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஹரியானா அணி, மூன்றாவது நாள் முடிவில் 16/2 ரன் எடுத்திருந்தது. சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
'பிரசிடென்ட்' முன்னிலை
சேலத்தில் ('பி') நடக்கும் போட்டியில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 459 ரன் எடுத்தது. பிரதம் சிங் (143) கைகொடுக்க, இந்தியன் ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 355/10 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி, மூன்றாவது நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 133/2 ரன் எடுத்து, 237 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
பரோடா வெற்றி
திண்டுக்கல், நத்தத்தில் நடந்த ('டி') போட்டியில் முதல் இன்னிங்சில் பரோடா 255, ஜம்மு காஷ்மீர் 114 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பரோடா அணி 254 ரன் எடுத்தது. 396 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய காஷ்மீர் அணி, நேற்று இரண்டாவது இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. பரோடா அணி 287 ரன்னிங் வெற்றி பெற்றது.
ஐதராபாத் கலக்கல்
திருநெல்வேலியில் நடந்த ('ஏ') போட்டியில் முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 178, ஐதராபாத் 293 ரன் எடுத்தன. ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 140 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 26/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.