/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி பதிலடி * விமல் குமார், ரித்திக் அரைசதம்
/
தமிழக அணி பதிலடி * விமல் குமார், ரித்திக் அரைசதம்
ADDED : செப் 03, 2024 11:38 PM

திருநெல்வேலி: புச்சிபாபு கிரிக்கெட் அரையிறுதியில் விமல் குமார், ரித்திக் அரைசதம் அடிக்க, டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் அணி, 291/6 ரன் எடுத்திருந்தது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தற்போது அரையிறுதி போட்டி நடக்கின்றன. திருநெல்வேலியில் நடக்கும் போட்டியில் ஐதராபாத், டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதுகின்றன.
முதல் இன்னிங்சில் ஐதராபாத் அணி 313 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழக அணிக்கு விமல் குமார் (75) அரைசதம் விளாசினார். மாதவ பிரசாத் (40) சற்று உதவ, இரண்டாவது நாள் முடிவில் பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 291/6 ரன் எடுத்து, 22 ரன் மட்டும் பின்தங்கி இருந்தது. ரித்திக் ஈஸ்வரன் (83), முகமது (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிரதீக் சதம்
திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் போட்டியில் சத்தீஸ்கர், டி.என்.சி.ஏ., லெவன் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் சத்தீஸ்கர் அணி, முதல் இன்னிங்சில் 294/3 ரன் எடுத்திருந்தது. நேற்று அமன்தீப் 97 ரன் எடுக்க, பிரதீக் (109) சதம் அடித்தார். சத்தீஸ்கர் இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 450/9 ரன் எடுத்திருந்தது.