/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து தொடரில் பும்ரா சந்தேகம்
/
இங்கிலாந்து தொடரில் பும்ரா சந்தேகம்
ADDED : ஜன 06, 2025 11:14 PM

சிட்னி: இந்தியாவின் பும்ரா காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழுமையாக பங்கேற்பது சந்தேகம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு முதுகுப்பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட, 10 ஓவர் மட்டும் பந்துவீசினார். இத்தொடரில் 151.2 ஓவர் (908 பந்து) வீசிய இவர் 32 விக்கெட் வீழ்த்தினார். அதிக ஓவர் வீசியதால், காயம் ஏற்பட்டிருக்கலாம்.
பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து இன்னும் முழுமையாக தகவல் வெளியாகவில்லை. ஒருவேளை இவரது காயம் 'கிரேடு-1' என்றால், 3 வாரம் ஓய்வில் இருப்பார். 'கிரேடு-2'வுக்கு 6 வாரம், 'கிரேடு-3வுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் ஓய்வில் இருக்க நேரிடும்.
இந்திய அணி, அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 'டி-20' (ஜன. 22, 25, 28, 31, பிப். 2), 3 ஒருநாள் போட்டியில் (பிப். 6, 9, 12) பங்கேற்கிறது. அதன்பின் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் (பிப். 19 - மார்ச் 9) விளையாடுகிறது. 'டி-20' உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தான் நடக்க இருப்பதால், 'டி-20' போட்டியில் பும்ரா விளையாடமாட்டார். சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் விதமாக, உடற்தகுதியை பொறுத்து, கடைசி ஒருநாள் போட்டியில் (பிப். 12, ஆமதாபாத்) மட்டும் விளையாடலாம்.

