/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
துணை கேப்டன் பும்ரா: இந்திய அணி அறிவிப்பு
/
துணை கேப்டன் பும்ரா: இந்திய அணி அறிவிப்பு
UPDATED : அக் 12, 2024 10:08 PM
ADDED : அக் 11, 2024 10:53 PM

புதுடில்லி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், அக். 16ல் பெங்களூருவில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் புனே (அக். 24-28), மும்பையில் (நவ. 1-5) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார்.
சமீபத்தில் முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி துணை கேப்டன் இன்றி களமிறங்கியது. இந்நிலையில் துணை கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 30, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 38 டெஸ்டில், 170 விக்கெட் சாய்த்துள்ளார்.
தயால் காயம்: வங்கதேச தொடருக்கு தேர்வான இளம் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயால் 26, பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் உ.பி., அணிக்காக விளையாடிய போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார். இதனால் இவர், நியூசிலாந்து தொடருக்கு தேர்வாகவில்லை. கணுக்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கும் இடம் கிடைக்கவில்லை.
'ரிசர்வ்' வீரர்கள்:'ஆல்-ரவுண்டர்' ஹர்ஷித் ராணா, 'மிடில்-ஆர்டர் பேட்டர்' நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்துவீச்சாளர்களான மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா, 'ரிசர்வ்' வீரர்களாக இடம் பிடித்தனர்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராத் கோலி, லோகேஷ் ராகுல், சர்பராஸ் கான், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.