தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நம்ம பும்ரா 'நம்பர்-1': டெஸ்ட் தரவரிசையில் சாதனை

நம்ம பும்ரா 'நம்பர்-1': டெஸ்ட் தரவரிசையில் சாதனை

நம்ம பும்ரா 'நம்பர்-1': டெஸ்ட் தரவரிசையில் சாதனை


UPDATED : பிப் 07, 2024 10:58 PM

ADDED : பிப் 07, 2024 10:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2024 10:58 PM ADDED : பிப் 07, 2024 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தனர்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, 881 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இதன்மூலம் ஐ.சி.சி., தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என புதிய வரலாறு படைத்தார் பும்ரா. இதற்கு முன் இந்திய ஜாம்பவான் கபில்தேவ் (1979 டிச. - 1980 பிப்.) 2வது இடம் பிடித்திருந்தார். தவிர, இப்பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றிய 4வது இந்திய பவுலரானார். ஏற்கனவே பிஷன் சிங் பேடி, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா முதலிடம் பிடித்திருந்தனர்.

கடந்த 2017, நவ. 4ல் 'டி-20' போட்டியில் முதலிடம் பிடித்திருந்த பும்ரா, 2018, பிப். 4ல் ஒருநாள் போட்டியில் 'நம்பர்-1'இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள், 'டி-20' என மூன்று வித போட்டியிலும் முதலிடம் பிடித்த முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்காத இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின் (841 புள்ளி) முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஜெய்ஸ்வால் முன்னேற்றம்



பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 இடம் முன்னேறி 29வது இடத்தை கைப்பற்றினார். விசாகப்பட்டனம் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய இவர் (209) இரட்டை சதம் விளாசினார். இப்போட்டியில் சதம் விளாசிய மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் 14 இடம் முன்னேறி முதன்முறையாக 38வது இடத்தை தட்டிச் சென்றார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (416), அஷ்வின் (326) முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர். மற்றொரு இந்திய வீரர் அக்சர் படேல் (286) 5வது இடத்துக்கு முன்னேறினார்.

இதுவரை

சர்வதேச கிரிக்கெட்டில் பும்ராவின் செயற்பாடுபிரிவு போட்டி விக்கெட் சிறந்த பந்துவீச்சுடெஸ்ட் 34 155 6/27ஒருநாள் 89 149 6/19'டி-20' 62 74 3/11



'டாப்-5' பவுலர்

'ரேங்க்' வீரர்/அணி புள்ளி1 பும்ரா/இந்தியா 8812 ரபாடா/தெ.ஆப்., 8513 அஷ்வின்/இந்தியா 8414 கம்மின்ஸ்/ஆஸி., 8285 ஹேசல்வுட்/ஆஸி., 818



'டாப்-5' ஆல்-ரவுண்டர்


'ரேங்க்' வீரர்/அணி புள்ளி1 ஜடேஜா/இந்தியா 4162 அஷ்வின்/இந்தியா 3263 சாகிப்/வங்கம் 3204 ஸ்டோக்ஸ்/இங்கி., 2955 அக்சர்/இந்தியா 286



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us