/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பவுமா மீண்டும் கேப்டன்: இந்திய டெஸ்ட் தொடருக்கு
/
பவுமா மீண்டும் கேப்டன்: இந்திய டெஸ்ட் தொடருக்கு
ADDED : அக் 27, 2025 10:26 PM

ஜோகனஸ்பர்க்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணியில், காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் பவுமா இடம் பிடித்தார்.
இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் நவ. 14ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் (நவ. 22-26) நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. காலின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேஷவ் மஹாராஜ், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர் என, மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக ரபாடா, 'ஆல்-ரவுண்டர்' கார்பின் போஷ், மார்கோ யான்சென், வியான் முல்டர் தேர்வாகினர்.
அணி விபரம்: பவுமா (கேப்டன்), மார்க்ரம், ரியான் ரிக்கிள்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேன், டிவால்டு பிரவிஸ், ஜுபையர் ஹம்சா, டோனி டி ஜோர்ஜி, கார்பின் போஷ், வியான் முல்டர், மார்கோ யான்சென், கேஷவ் மஹாராஜ், செனுரன் முத்துசாமி, ரபாடா, சைமன் ஹார்மர்.

